முத்தம் -இனிக்க இனிக்க உயிர் கேட்குதே

முத்தம் -இனிக்க இனிக்க உயிர் கேட்குதே!
××××××××××××××××××××××××××××××××××
உள்ளம் திறந்து வாரித் தந்தால்
வள்ளல் என்று பாடுவேன்
முள்ளும் கண்கள் அள்ளும் உன்னை
கிள்ளை என்று ஏந்துவேன்
சின்ன ஆசை தோளைத் தொட்டு
சிலிர்க்கும் காதில் சொல்லுதே
தேகம் எங்கும் தொட்டு
தத்தித் தை தை தை
வித்தைச் செய் செய் செய்
முத்தம் வை வை வை
சின்ன ஆசை தோளைத் தொட்டு
சிலிர்க்கும் காதில் சொல்லுதே !
உன்னை அள்ளும் என்தன்
கை கை கை
அன்பைப் பொழிய அதுவே
மை மை மை
செம்பவள வாய் திறக்க
வேய் வேய் வேய்
செம்பொன்னே நம் உறவோ
நெய் நெய் நெய்
கிட்டக் கிட்ட இன்னும்
கிட்ட கிட்ட வா வா - கிளியே
தொட்டுத் தொட்டு என்னை
தொட்டுத் தொட்டுத் தா தா கிளியே
கொஞ்ச கொஞ்ச உதடுகள்
கொஞ்ச கொஞ்ச வா வா கிளியே
கெஞ்சக் கெஞ்ச விழிகள்
கெஞ்சக் கெஞ்ச தா தா கிளியே
செம்மாதுளை பிளந்து எட்டு எட்டு
செந்தேன் சொட்டு சொட்டு
என் நாவில் பட்டு பட்டு
இனிக்குதே இனிக்குதே இனிக்குதே
இனிக்க இனிக்க உயிர் கேட்குதே!