இளைஞர் சக்தி

வானமே.....எல்லை. ...
அதற்கு மேல் எதுவும் இல்லை. ..
இளைஞனே. ....
உன் சக்தி தான். ...உச்சம். ..
அதற்கு கீழ் தான் அனைத்தும் மிச்சம். ...
தங்க முலாம் பூசிய....
தகடில்லை நீ....
கரிக்குள் ஒழிந்திருக்கும். ...
வைரமடா நீ....
விசிறிக்கு அகப்படும், காற்றில்லை , நீ. ..
மலையோடு,மல்லுகட்டும். ...
சூறாவளி,நீ.....
கதிரவனை நம்பி, வாழும். ..
நிலவல்ல நீ. ...
கதிரவனுக்கே. ...
வெப்பம் தரும். ...
மூலமடா , நீ. ...
கல்லுக்குள் இருக்கும்,பிணைப்பால்...
செய்தது, உன் இதயம். ...
அதில் குத்தும், முள்ளும்கூட....
ஒடிந்தே தான்..போகும்....
உன் காலடி, கங்காய் எரியும்....
அதை அணைக்க.....
உன் உடலும்,அழைந்தே தான்...திரியும்.....
உன் கையோடு கம்பீரம்...
கரும் பாறைக்கு தெரியாது....
திமிர் பிடித்த பாறையை. ..
தீண்டி நீ மண்ணாக்கு....
கனல் கக்கும்,உன் பார்வையில்..
பட்டதெல்லாம்....
காகிதத்தில் , எரியட்டும்....
அனல் பறக்கும் உன் மூச்சு காற்றால்....
ஆயுதங்கள் உருகட்டும் .....
அன்பெனும் ஆயுதத்தால். ...
இயன்றவரை போராடு....
அதில் காயப்படும்,உயிர்கெல்லாம்....
நீயே...தாயாகு. ....

எழுதியவர் : (12-Nov-16, 10:37 am)
Tanglish : ilangar sakthi
பார்வை : 717

மேலே