இந்திய வாக்காளன் ஒரு இளிச்சவாயன்

வாக்காள பெருமக்கள் எல்லோரும் கருப்பு பணத்தை மீட்கனும்னு சொன்னாங்க....
கேட்கவே ரொம்ப நல்லா இருந்தது....

அதாவது அரசியல்வாதிகளிடமும் பணக்காரர்களிடமும் லஞ்ச அதிகாரிகளிடமும் நடிகர்களிடமும் தான் அந்த கருப்பு பணம் குவிந்து கிடப்பதாக அப்பாவி வாக்காளன் நினைத்து இருந்தான்....

இப்போ மோடி 500, 1000 செல்லாதுன்னு சொல்லி உங்கள் கைவசம் இருக்கும் 500,1000 ங்களை ஒப்படைத்து விடுங்கள் என கூறி விட்டார்.

இப்போ அதிர்ச்சியில் உறைஞ்சி போய் நிக்கிறது அதே வாக்காளன் தான்....

கருப்பு பணத்தில் கோடிகளில் சம்பளம் வாங்கும் ரஜினியும், தனுசும் இந்த திட்டத்தை அமோகமாக வரவேற்கிறார்கள்....

காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது...

ஏன் இதுவரை ஊழல் அரசியல் வாதிகள்,
அதிகாரிகள் என சொல்லப்பட்டவர்கள் எல்லாம் வரவேற்கிறார்கள்....

அப்படி என்றால் கருப்பு பணம் யாரிடம் இருக்கிறது?

கருப்பு பணத்தை வைத்து செலவு செய்வதாக நம்பப்படும் அரசியல் வாதிகள் நாளை முதல் நடுத்தெருவுக்கு வந்து விடுவார்களா?

அவர்கள் எல்லாம் யாராவது சோறு போடுங்களேன் என கெஞ்சுவார்களா?

அப்படி நடந்தால் இந்த திட்டம் சிறப்பானது தான்

இனி சினிமா டிக்கட்டுகள் பிளாக்கில் விற்கப்படாது என்றால் இது சிறப்பானது தான்

இனி அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்க மாட்டார் எனில் இது சூப்பர் தான்

அரசு வேலைக்கு இனி பணம் பெற்றுக்கொள்ள முடியாது எனில் இது சூப்பர் தான்...

ரஜினியும் அஜித்தும் தங்கள் சம்பளம் இவ்வளவு தான் என அறிவித்து விட்டால் இது சூப்பர் தான்...

அரசின் திட்டபணிகள் 40 சத கமிசன் இல்லாமல் நடக்கும் எனில் இது சூப்பர் தான்...

டாக்டர் படிப்புக்கு இனி கோடிகளில் லஞ்சம் கொடுக்க தேவையில்லை என்றால் இது சூப்பர் தான்...

சாலை ஓரம் வண்டியை நிறுத்தி காவலர்கள் லஞ்சம் வாங்க மாட்டார்கள் எனில் சூப்பர் தான்...

பில் இல்லாத எல்லாமும் கருப்பு பணம் தானே...

ஆனால் நிஜத்தில் என்ன நடக்க போகிறது..

ஆடு வளர்த்து துட்டு சேர்த்து வைத்தவன் பணத்தை கொண்டு ஒப்படைப்பான்

தங்கையின் திருமணத்துக்காக செர்த்து வைத்த பணத்தை அண்ணன் ஒப்படைப்பான்...

மகனின் படிப்பு செலவுக்கு என சேர்த்து வைத்த பணத்தை அப்பா ஒப்படைப்பார்....

சிறுக சிறுக சேர்த்து சீட்டு போட்டு சேமித்த பணத்தை அன்றாடம் கூலிக்காரர்கள் ஒப்படைப்பார்கள்....

காய்கறிகள் விற்று விவசாயியும், ரோட்டு கிழவியும் சேர்த்த பணம் ஒப்படைக்கப்படும்

பெட்டிகடை நடத்தும் அண்ணாச்சி பணத்தை ஒப்படைப்பார்....

அதனால் என்ன?

இங்குதான் மோடியின் திருவிளையாடல் இருக்கிறது.

நம்மிடம் இருக்கும் பணத்துக்கு கணக்கு கேட்பார்கள்...(கணக்கிற்கு நாம் எங்கே போவது?)
இல்லை என்றுதான் வாக்காளனால் சொல்ல முடியும்... இல்லை என்றால் இந்த வருமானத்துக்கு வரி கட்டு என்பார்கள்...

அதாவது இத்தனை ஆண்டு காலம் சிறிது சிறிதாக ரத்தம் சிந்தி சேர்த்த பணத்துக்கு வரியை கொடு என்பார்கள்...

மோடி கேட்பதை கொடுப்பது தானே தேசபக்தி...

ஆனால் வெளிநாட்டில் இருப்பதாக சொல்லப்படும் கருப்பு பணம் எங்கே என கேட்க கூடாது...

அரசியல் வாதிகளின் வீடுகளில் உள்ள பாதாள அறைகளில் கருப்பு பணம் இல்லையா என கேட்க கூடாது....

வோடபோனுக்கு 4500 கோடி வரியை கட்ட வேண்டாம் என சொன்னது ஏன் என கேட்க கூடாது

நோகியா நிறுவனம் வரிகட்டாமல் ஒடிய போது தடுக்காதது ஏன் என கேட்க கூடாது...

மல்லையா ஏன் கைதாகவில்லை என கேட்க கூடாது? அய்யோ அவன் மக்கள் வரிப்பணத்தை வாங்கி பெண்களுடன் கும்மாளமிட்டானே என கொந்தளிக்க கூடாது...

அவர்கள் சொல்கிறார்கள் கருப்பு பணம் உழைக்கும் மக்களிடம் இருக்கிறது என்று....

பிறகென்ன ஒப்படைத்து விடுங்கள் மக்களே...

-
-இணையம்

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (15-Nov-16, 10:54 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 203

மேலே