நெத்தியிலே பொட்டு வச்சு

அம்மா, உங்க இடது கை ஆள்காட்டி விரலக் காட்டுங்க
@@@@@
எதுக்குங்க காசாளரே?
@@@@!
அந்த விரல் நகத்திதில நீளமா நாமம் போடற மாதிரி அழியாத கருப்பு மையில ஒரு தடிமனா ஒரு கோடு போடுவோம். அது காஞ்சதுக்கப்பறந்தான் நீங்க தந்த செல்லாத 1000, 500 நோட்டுகள வாங்கிட்டு உங்களுக்கு புது நோட்டுக்களத் தருவோம்.
#@@@@@
அய்யா காசாளரே, இது தனிமனித உரிமையைப் பறிக்கும் செயல். உங்க விருப்பம் போல கண்ட எடத்துல அழியாத கருப்பு மையில கோடு போடறதுக்கு எந்தப் பொண்ணும் அனுமதிக்கமாட்டா. என்னோட அழகான ஆள்காட்டி வெரல நீங்க அசிங்கப்படுத்த விடமாட்டேன்.
@@@@@@@
இது மேலிடத்து உத்தரவு. நாங்க அத மீற முடியாது. கொஞ்சம் அனுசரிச்சு போங்கம்மா.
@@@@@@
போயிட்டுப் போகுது. உங்கள பாக்கவே பாவமா இருக்குது. ஆள்காட்டி விரலுக்கு பதிலா அந்த அழியாத கருப்பு மையில ஒரு அழகான வட்டமான பொட்டா எந் நேத்தில வச்சிருங்க. இதத் தான் பெண்கள் விரும்புவாங்க. இதுக்கு நீங்க மறுப்புச் சொன்னா இன்னும் 10 நிமிசத்தில பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 10,000 பேர் திரண்டு வந்து போராட்டம் நடத்துவாங்க. அப்பறம் உங்க முதன்மை மேலாளர் உங்கள இடை நீக்கம் செய்யப்படும் நிலை ஏற்படும். அதுக்கப்பறம் நாகாலாந்தோ மணிப்பூரோ!
@@@@@
அம்மா, அம்மா வேண்டாம்மா. அம்மா சுந்தரி இங்க வாம்மா. பணம் மாத்த வந்த பொண்ணுங்க பாட்டிங்களுக்கெல்லாம் அழியாத கறுப்பு மையில அழகான பொட்டா வச்சு நம்ம வங்கிப் பேரக் காப்பாத்துமா.
@@@@@@@
சரிங்கய்யா.

எழுதியவர் : மலர் (16-Nov-16, 10:52 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 332

மேலே