கல்லூரி காலங்கள்
பன்னிரண்டாவது முட்டி முன்னேறி
வந்தாலும் காலேஐ் என்னமோ இந்த சினிமாவுல காட்டுற மாதிரி ஜாலியா இருக்கும்னு நினைக்கிறோம் ஆனா எது என்னவோ இங்கிலீஸ்லையே கேட்டு போட்டிடுது ....
மகளீர் கலைக்கல்லூரினாலே
சொர்க்கம் தான், ஒரு வித பயம் மனசுக்குள்ள இருந்தாலும் நம்மள ரேகிங் பன்னறது என்னமோ பொண்ணுக மட்டும்ங்கற விசியம் கொஞ்சம் நிம்மதிய கொடுக்கும் ,
கல்லூரி இன்று திறக்கப்படுங்கற பலகைய படிச்சுட்டே உள்ள வர்ரோம் ஆமா அதான் என்னோட கல்லூரி முதல் நாள், பிசிஏ கல்லூரி வகுப்பு எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடிச்சு போகும்போது ஒரு குருப் நம்மள கூப்பிடும் அதான் நம்ம சீனியர்ஸ் அவங்க கிட்ட இருந்தெல்லாம் தப்பிச்சிட்டு நம்ம கிளாஸ்க்கு போனா அங்க நமக்காக கடைசி பெஞ்ச் காத்துட்டு இருக்கும் சரி இதான் நம்ம இடம்னு சொல்லி உட்கார்ந்தா உள்ள வந்த டீச்சர் கரெக்டா கடைசி பெஞ்ச்ச எழுப்பி கேள்வி கேப்பாங்க ,, உண்மையிலே நாங்க தான் பாவம் பாஸ், சன்னலோர இருக்கை நல்ல காத்து தயிர் சாப்பாடு தூக்கம் வராம இருந்தா தானே தப்பு அப்பன்னு பாத்து கரெக்டா இந்த ஆங்கில வகுப்பு வரும் பாருங்க ஒரே தூக்கம் வித் மயக்கமா தான் இருக்கும்..,
கடைசி பெஞ்ச்ங்கறதால அதுக்குண்டான குணம் அப்படியே இருக்கும் எங்களுக்குன்னு ஒரு சங்கம் இருக்கு சங்கத்துல பத்து பேரும் இருக்காங்கன்னு சொல்ல தோனும் ... கொஞ்சம் படிப்போம் ஆனா பெயில் ஆக மாட்டோம் , கொஞ்சம் பைசா வச்சுகிட்டு கேண்டீனே சுத்தி சுத்தி வருவோம் காலேஐ் சுவத்துல எல்லாம் எங்க பேரா தான் இருக்கும் அவட்ஸ்டேன்டிங் ஸ்டூடன்ஸ் நாங்களே தான் எப்ப பாரு பணிஸ்மெண்டு, இம்போசிசன்னு காலேஐ்க்கு வெளியவே தான் சுத்துவோம் , யாராவது பேசலைனா ஈகோ எல்லாம் பாக்கவே மாட்டோம் கட்டி பிடிச்சோ, காலுல விழுந்தோ பேசிடுவோம், எச்சி சாப்பாடு எல்லாம் யோசிக்கவே மாட்டோம் அதையும் சேர் பண்ணி சாப்டுவோம், எங்கள்ள யாராவது வீட்ல விசேசம்னா மொத ஆளா அங்க நிப்போம் , ஸ்டோன் பெஞ்ச்ல அரட்டை அடிக்க உட்காந்தது விளையாடிது ,மரத்தடி நிழல்ல
வட்டமா உட்காரும்போது ப்ரண்ட் மடியில தலைய வச்சி தூங்கினது என் தோழி போல் உண்டானு கெத்தா சுத்துவோம் நாங்க சீனியர் ஆனதுக்கு அப்புறம் காலேஐ் நம்ம கன்ரோல் தான் மூனு யுகம் தான் அவ்ளோ அழகு எல்லோராலும் விரும்பிய நாட்கள் கல்லூரி நாட்களா மட்டும் தான் இருக்க முடியும்
கடைசி நாளுல நாம மூனு வருசமா அமர்ந்து படிச்ச இருக்கைய திரும்பி திரும்பி பாத்துட்டு வரும்போது தாயை பிரிஞ்சு போற மழலை மாதிரி இருக்கும் !!!!! அதுவும் நமக்கு கண்ணீரால விடை தரும் , நண்பர்கள் நம்மள பத்தி டைரில எழுதி கொடுத்திட்டு கட்டி பிடிக்கும் போது கட்டாயம் அழுகை வரும் , எங்கு இருந்தாலும் நம் நட்புகள் மாராது அந்த மரத்தடி இருக்கையும் , மர நிழலும் நம் கதை பேசட்டும் !!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
