வரம் வேண்டும் கொடுப்பாயா

வரம் வேண்டும் கொடுப்பாயா...???

என்ன புண்ணியம் செய்தேன் உன் அன்பினை நானும்
பெற்றிடவே...
என்ன தவம் செய்தேன் உனை வரமாய் நானும் அடைந்திடவே...
தோள் கொடுக்கும் தோழி உன் அன்பினிலே என்னை நானும் மறந்தேனடி...
தாய்மடி தந்த தமக்கை உன் நெஞ்சினிலே என் கண்ணீர் நானும் கரைத்தேனடி....

ஒரு தாய் வயிற்றினுள் பிறக்காமலே ஒரு உயிராய் நாமும்
மாறிப்போனோமடி.....
கடல் கடந்து இருக்கும் நானும் உன் அன்பு மழையில்
கரைந்தே போனேனடி...
நீ பாடிடும் தாலாட்டு பாட்டினிலே என் கவலைகள் மறந்து
உன் மடியினில் உறங்கிப்போனேனடி....

தனிமையில் தவித்த எனக்கும் ஒரு உறவாய் நீயும்
கரம் கொடுத்தாயடி...
என் உயிரினை நான் பிரியும் வேளையிலே உன்
மடியினில் மரணம் வேண்டுமடி....
நான் கேட்டிடும் வரம் வேண்டும் கொடுப்பாயா...

எழுதியவர் : அன்புடன் சகி (17-Nov-16, 9:55 pm)
பார்வை : 377

மேலே