பற்கள் வெண்மை துறக்கும்! பற்று அற்று உயிர் பறக்கும்

பற்கள் வெண்மை துறக்கும்
பற்று அற்று உயிர் பறக்கும்
×××××××××××÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷×××
புகை
புகைத்தல் மறக்க மறுத்தோர்
புகை மிகை புகைப்பார்
தகைமை தானே இழப்பார்
நகைப்புக்கு இடம் வகுப்பார்.
விரல்களில் நஞ்சு
நீலம் பூக்கும்
விரல் நகங்கள்
மஞ்சள் காணும்
நரம்பு உணர்வுகள் நலிவுறும்
நா வறண்டு தடிமன் உறும்
நாவில் உணர்வு மங்கும்
நற் சுவை அறிய ஏங்கும் பற்ற
பல் ஈறும் பலம் இழக்கும்
பற்கள் வெண்மை துறக்கும்
பற்று அற்று உயிர் பறக்கும்!