முள் காட்டும்  முடிவு காலம் !

முள் காட்டும்  முடிவு காலம் !
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
புகைத்தல் விதைக்கும்
குடலில் புண் 
குதத்தில் வலி 
மலம் கழிக்க அவதி 
மனம் இழக்கும் நிம்மதி! 
பசி தூக்கம் பகை ஆகும் 

கருவிழியில் புரை எழும் 
காட்சிக்குத் திரை விழும 
கைகள் வழி கோல் ஏந்தும் 
கால்கள் இடர் தடவி நீந்தும் 

உதவும் திசுக்கள் 
பற்று நீக்கும் 
உதவாத திசுக்கள் 
புற்று வைக்கும் 
உணவு வாசல் புடைக்கும் 
உள் மூச்சும் அடைக்கும் !

வள உறுப்பு அத்தினையும் புகை 
உள் இழுப்பில் அயர்ச்சி உறும் 
முள் காட்டும் 
முடிவு காலம் 
எள் நாள் 
கேட்டு வரும். !

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (17-Nov-16, 10:23 pm)
பார்வை : 54

சிறந்த கவிதைகள்

மேலே