உள்ளமதில் ஊனம்

உள்ளமதில் ஊனம்....
மடிப்புக்கலையாத ஆடை
அணிந்திருந்தும்...
ஆடையில் வெள்ளையாய்
மனதெல்லாம் அழுக்குகள்
சுமந்து வெளியில்
வெள்ளந்தியாய்
வேடமிடுகின்றான் மனிதன்...
மொழியறிந்தவன் வாய் மூடி
மௌனமாய் நிற்க...
மௌனத்தை மொழியாக
கொண்டவன் அநீதியை
எதிர்த்து நிற்கின்றான்..
அவனை அகிலம் ஊமை
என்றழைத்தாலும்...
உலகம் எங்கும் தன் குரலை
ஒலிக்க விடுகின்றான்....
அகத்தில் ஒன்று வைத்து
முகத்தின் முன் நடித்தே
முதுகின் பின் குத்துகிறான்...
நல்லவன் என்ற முகமூடி
மறைவில் தன் முகத்தை
ஒளித்துக்கொள்கின்றான்...
பிறப்பில் ஊனமுற்றவனை
எள்ளி நகையாடுகின்றான்...
உள்ளமதில் ஊனமுள்ளவன்
அகிலத்தின் பார்வையில்
மகானாய் உயர்ந்து நிற்கின்றான்..
மனதளவில் தன் வாழ்க்கையை
இழந்து தோற்று போகின்றான்....
மனிதத்தை தொலைத்த மனிதன்
மனிதனை எங்கோ தேடுகின்றான்....
தொலைந்தது தான் என்று
அறியாமலே....
மண்ணுக்குள் மடிந்து போகின்றான்....