விழிகள் கலங்கும் செந்நீர் சிந்தும்

விழிகள் கலங்கும்
செந்நீர் சிந்தும்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷்÷÷ ÷÷÷÷
புகைத்தல்
புகை மிகை புகைப்பார்
தகைமை ஆண்மை இழப்பார்
நகைப்புக்கு இடம் வகுப்பார்.
உயிர்நிலை வீங்குதல்
தேய்ந்து குறையும்
உவந்து முனைதல்
தோய்ந்து மறையும்
மணந்த நாள் வீங்கிய தோள்
மகிழ் இரவில் தூங்கும் தோளே.
விரைகளில் உயிர் நீர் மங்கும்
விளையாது நன் மக்கள் செல்வம்
வழி அறியாமல்
மனம் சிதையும்
விழிகள் கலங்கும்
செந்நீர் சிந்தும் !