பிணி பகிரும் புண்ணியவான்கள்

பிணி பகிரும்
புண்ணியவான்கள்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

காத தூரம் 
கடுகிச் சென்று 
கடின உழைப்பு 
ஈந்து நன்று 
காசும் பணமும் 
கைவரப் பெற்றும் 
கள்ளப் புகைக்கு 
விரயம் ஆகும். 

சகலரும் புழங்கும் இடத்தில் 
சிந்தனை இன்றி புகைப்பார் 
வகை பலவாய் தன்னில் 
முகைத்த துன்பம் அனைத்தும் 
மிகை அளவு பிறர்க்கு பகிர்வார் 

தாய்மை உற்ற மாதரும் 
தளர்வு உற்ற மாந்தரும் 
துளிர்த்து வரும் சிசுவும் 
துவண்டு போவார் எளிதில் !

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (17-Nov-16, 11:12 pm)
பார்வை : 65

மேலே