அன்னை -II

பத்தாம் திங்கள் முடிந்ததும்
தாயின் கர்பப்பையை
உதைத்து விளையாடியது போதுமென்றே
இப்பிரபஞ்சத்தில் பூத்த மல்லிகைப் பூவே
உனக்கு தெரியாதல்லவா
பிரசவத்தின் வலியும் இன்பம் தானே என்று
உனக்காகவே
உன்னைப் பெற்றெடுக்கவே
காத்திருப்பவள் அன்னை என்று
வானம் பார்த்து
மழைக்காக
காத்திருக்கும்
விவசாயி போல்

எழுதியவர் : சரத் குமார் (18-Nov-16, 10:35 pm)
பார்வை : 361

மேலே