அழகோவியம்

புதுமைக்கெல்லாம் புதுமை
நீ ஒரு அழகு பதுமை...
தென்றல் வீசும் பூஞ்சோலை
இது உன் அழகுக்கு நான்
கோர்த்த கவிதை மாலை...

ஐம்புலன்களையும்
அடக்கியாளும் ரிஷி
உன் அழகை கண்டால்
அவனுக்கும் எடுக்கும் உடல் பசி...
நீ ஒரு ஐம்பொன் அழகுச்சிலை
உன் சிரிப்பும் ஒரு ஆயக்கலை..

வாரத்தின் ஏழு நாட்களையும்
செவ்வாயாகவே உணர்கிறேன்
உன் செவ்வாயை கண்டு
நீ மன்மத தேசத்து அழகு ஓவியம்
இது எழுதப்படாத புது காவியம்...

எழுதியவர் : செல்வமுத்து.M (19-Nov-16, 11:27 am)
பார்வை : 299

மேலே