உன் ஞாபகங்களுடன்

உன் ஞாபகங்களை
நெஞ்சில் சுமந்து கொண்டு..
உணர்வுகள் என்னும் பூவெடுத்து..
பேனா என்னும் நார் தொடுத்து..
கவிதை என்னும் மாலை ஒன்று
உனக்காக தொடுத்து வைக்கிறேன்
உன் கழுத்துக்கு பொருத்தினால் ஏற்றுவிடு இல்லை என்றால்
என் கல்லறை மீது அதை போட்டுவிடு..