காதலும் கடந்து போகும்

இதமான இரவு... தென்றல் மரங்களை வருடிக்கொடுக்க அந்த இருளில் குளிர் சப்தமில்லாமல் சலனமிட்டது .அப்படியொரு அமைதி ,ஏறக்குறைய நிலவின் தாலாட்டில் ஏராளமானோர் உறங்கிவிட்டனர் .பொதுவாக இப்படிப்பட்ட சூழலில் நிஷா கவிதை எழுதுவது வழக்கம் .அன்று அவள் எழுதுவதற்காக எடுத்த தாளில் மௌனம் மட்டுமே எழுதப்பட்டது .... அவளது கண்களில் ஒருவித விரக்தி ....எத்தனைபேருக்கு நான் அறிவுரை சொல்லிருப்பேன் ,எத்தனைபேரை நான் கேலி செய்திருப்பேன் ஆனால் இன்று எனக்கே இப்படி ஒரு நிலைமை வந்தபிறகு தான் தெரிகிறது ..."காதல் தோல்வி உயிர் பிரியும் வலியைவிட மேலானது என்று " இந்த காதல் விதைகள் மட்டும் ஏன் எப்போதும் வலியையே பிரசவிக்கிறது .........காதல் நதிகள் எல்லாம் கண்ணீர் கடலில் சங்கமிக்க வேண்ண்டும் என்பதுதான் விதியா? அவள் கண்களில் தேங்கிய கண்ணீர் கன்னத்தில் வழிய தயாராகஇருந்தது ..இதயத்தில் உளி வைத்து அடிப்பதுபோல் கனமான வலி .....பிரின்ஸ் பிரிந்து சென்று இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது ஆனாலும் நிஷா விடுவதாயில்லை ..தொடர்ந்து போன் செய்வதும் நேரில் சென்று சமாதானம் கூறியும் பிரின்ஸ் மனநிலையை மாற்ற எவ்வளவோ முயன்றுவிட்டாள்...அப்படித்தான் இன்றும் அவனுக்கு போன் செய்தால் நிஷா ....எதிர்முனையில் பிரின்ஸ் ..நிஷா ஹலோ சொல்வதற்குள் "புரிஞ்சிக்கோ நிஷா நீ எனக்கு வேண்டாம் ......நான் உன்ன விரும்பல .நமக்கு கல்யாணமே நடந்தாலும் அது நல்லாயிருக்காது ....நீ நல்ல பொண்ணு உனக்கு நல்ல வாழ்க்கை அமையும் ....பட் ப்ளீஸ் என்னை விட்டுவிடு " என்று அழுத்தமாக சொல்லிவிட்டான் .
பிரிவிற்கு ஒரு தெளிவான காரணம் இருந்தால்கூட ஏற்றுக்கொள்ளலாம் ,ஏன் பிரிந்தோம் என்று தெரியாமல் எப்படி என் காதல் தோற்றுவிட்டது என்று நான் ஒப்புக்கொள்ளமுடியும் .........இத்தனை நாட்கள் பழகியது ,பேசியது எல்லாம் என்ன வெறும் கனவா ? என் எதிர்காலம் வெறும் கானலா?...கேள்விகள் மனதில் எழ எழ உடலில் ஏதோஒரு பாகம் துண்டிக்கப்பட்டது போல,
இழக்ககூடாததை இழந்தது போல இருந்தது நிஷாவிற்கு.........

கண்ணீரிலே பாதி இரவு கழிந்தது ......திடீரென்று ஒரு புது நம்பிக்கை வந்தவளாய் "இல்லை பிரின்ஸ் என்னை ஏமாற்றமாட்டான்..நாளையும் அவனை நேரில் சென்று சந்திக்கலாம் சந்தித்து ஏன் இந்த முடிவு? என்று கேட்கவேண்டும் அவன் இல்லாமல் என்னால் வாழமுடியாது...என்பதை புரியவைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவசர அவசரமாக அவளுக்கு தோன்றியதை எல்லாம் சேர்த்து ஒரு கவிதையாக எழுதினாள்...நிஷா எழுதும் கவிதை என்றால் ப்ரின்ஸ்க்கு ரொம்ப விருப்பம் .. .
அடுத்த நாள் விடியலை எதிர்பார்த்திருந்தவள் காலையிலே புறப்பட்டு பிரின்ஸ் அலுவலகத்திற்கு சென்றாள்.நிஷாவை பார்த்தவுடன் உன்கிட்ட பலமுறை சொல்லிட்டேன் என்னை ஏன் இப்படி தொந்தரவு பண்ற ?உனக்கு என்னதான் பிரச்சனை உன்னை கல்யாணம் பண்ண எனக்கு எந்த தகுதியும் கிடையாது போ...உன்னோட எதிர்காலத்தை எனக்காக வீணாக்கிடாத..நாம பழகினதை மறந்திடு ...ப்ளீஸ் இங்கேயிருந்து புறப்படு இதுவே நாம சந்திக்கிற கடைசி தடவையா இருக்கட்டும் நிஷாவை பார்த்தவுடன் கண்மூடித்தமாக கத்திவிட்டான் பிரின்ஸ் .
ப்ரின்ஸ்க்கு இவ்ளளவு கோபமாக பேசத்தெரியும் என்பதை நிஷா இப்போதுதான் முதல்முறை பார்க்கிறாள் கையில் கொண்டுவந்த கிரீட்டிங் கார்டை அவன் மேசையில் வைத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் .
தொடரும் .....

எழுதியவர் : மோனிஷா.A (23-Nov-16, 4:30 pm)
சேர்த்தது : அ மோனிஷா
பார்வை : 269

மேலே