தவம்
எதற்க்கோ தவமிருந்து
ஜனித்திருப்பாய் இப்பூமிதனில்
நீ கேட்டவரம் எதுவன்றோ
நான் அறியேன்
அவ்வரம் கிடைக்கப்பெற்றாயோ
ஆகையால் இவ்விடம் விட்டுச்சென்றாயோ
நான் அறியேன்
உன் செயல்களின் உறவுகளை மட்டும்
நினைவுகளாய் விட்டுச்சென்றதேன்
அவைகள் யாவும் தவமிருக்கின்ற
தன்னையே உருக்கி
தவமிருக்கும் மெழுகுவர்திகளாய்
விட்டுச்சென்ற உறவு மீண்டும்
இங்கு பிரவேசிக்க வேண்டி …
எல்லாம் உன்னுறவுகளாயிற்றே
உன்னையே தொடர்கின்றன
மேகம் பொழியும் மழை துளி
நிலம் வர மறுப்பதில்லை
கீழிருந்து மேலேயெழும் பேரலை
திரும்ப கீழ்வர மறுப்பதில்லை
நீ மட்டும் ஏன் இன்னும் மறுக்கிறாய்
உன் ஜனனம் என்னும் வரம் வேண்டியே
நீ விட்டுச்சென்ற உறவுகள் தவமிருக்கின்றன.
நீயின்றி யவர்த்தருவார் இவ்வரம்.