ஒரு நிஜம்

நாளை என்பது நனவா
எனத் தெரியாமலேயே
கனவுக்குள் கலைகிறது
ஒரு நிஜம்!

நினைவுக்குள் நுழையாமல்
துல்லியமாய் துளிர்க்கிறது
தவறாமல் துளைக்க
துரமாய் பல கனா,

கனாக்களின் வடுக்களில் மட்டும்
அந்தோ பரிதாபமாய் பரிதவிக்கிறது
என்றோ விட்டுச்சென்ற
என்றோவான ஒரு நிஜம்..

எழுதியவர் : அஸ்தீர் (25-Nov-16, 5:35 pm)
Tanglish : oru nijam
பார்வை : 98

மேலே