சுமைமிகு உருவமது

************************************
​​மதம்பிடித்த யானையும் கட்டிற்குள் வந்திடும்
மனிதனின் கட்டளைக்குப் பணியும் அன்றோ !
மதவெறிக் கொண்டு அலையும் மனிதனோ
மமதையோடு திரிகிறான் மண்ணில் ஏனோ !
பெருத்த உடலானாலும் சிரத்தையுடன் ஏறிடும்
வருத்தமிகு காட்சியால் வலிக்குது நெஞ்சமும் !
கருத்துகள் பலவுண்டு யானையைப் பற்றியும்
கருத்த உருவமது கவலைக் கொள்வதில்லை !
அயராத வண்ணம் அமர்ந்திட்டு வாகனத்தில்
பயணம் தொடங்குது பாவமுடன் மிருகமும்
சுமைமிகு உருவமது சுகமாக பயணிக்கவே
உளமார வாழ்த்தி வழியனுப்பி வைப்போம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (26-Nov-16, 8:02 am)
பார்வை : 117

மேலே