மனிதனும் மந்தியும்
********************************
மந்தியென நினையாதீர் மானிடனே
குந்தியுள்ள நிலையும் காட்டுகிறதே
அந்திநேர வேளையில் படிக்குமோ
தந்தியாய் வருகின்ற செய்திகளை !
எம்பிறப்பு வழியில்தான் உன்பிறப்பும்
நாளிதழில் காண்கிறேன் நானுமே
நெஞ்சமதும் வலிக்குதே வாசித்தால்
பஞ்சமா பாதகங்கள் பஞ்சமின்றி
வஞ்சம் தீர்க்கும் வன்முறையும்
காமவெறி கயவரின் செயலுமே
பிழைத்திட வழியின்றித் திருடிடும்
கொலை புரிந்திடும் காட்சிகளும்
தலைப்பில் வருகிறது படத்துடனே !
நேயத்தை கைவிட்ட மனிதஇனமே
காயம்பட்ட மனதில் தோன்றுதே
உன்னைவிட நானே மேலென்று !
***************************************
பழனி குமார்
25.11.16
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
