அன்பிற்கும் உண்டோ

அன்பிற்கும் உண்டோ

அன்பெனும் அருங்குணம் அலைகடலென
அகிலத்தில் அனைவரின் நெஞ்சங்களிலும்
அளந்திடா நிலையிலே நிறைந்திட்டால்
குற்றங்கள் புரிந்திடா எண்ணங்களும்
ஆழ்மனதில் தங்கிடும் பாசநேசங்களும்
அமைதியே நிலவிட அடித்தளம் ஆகிடும் !
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழென
அன்பும் இல்லை அன்னைக்கு இணையாக !
அன்பெனும் விளைச்சல் அகத்தில் பெருகினால்
அகிலத்திலும் இராதே முதியோர் இல்லங்களும் !
கூடிவாழ்வதே கோடி நன்மையென உரைத்தார்
வாழ்ந்துக் காட்டிய முன்னோர் முற்காலத்திலே !
பகையுணர்வும் மறையும் பண்பான அன்பினால்
நட்புணர்வும் வளர்ந்திடும் காட்டிடும் அன்பினால் !
இல்லங்கள் தோறும் இன்பங்கள் பொங்கிடும்
உள்ளங்கள் நிறைந்த கள்ளமில்லா அன்பினால் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (26-Nov-16, 7:54 am)
Tanglish : anpirkum undo
பார்வை : 260

மேலே