எனது கனவுகள்

-----------------------------------------------------------------
தீராத வேட்கைகள் நாளும் உள்ளத்தில்
கனவிலும் வருகிறது சிலவும் எனக்கு !
சாதிகளே இல்லையென அரசாணை ஒன்றும்
கட்சிகளே இல்லை சாதிக்கொன்று என்றும் !
அன்னைத்தமிழ் ஆட்சி மொழியானது என்றும்
தமிழருக்குப் பிறந்தது ஈழத்தில் தனிநாடென்றும் !
மெய்ப்படுமா கனவுகளும் எனது வாழ்நாளில்
மகிழ்ந்திடுமா நெஞ்சம் நானும் மறையுமுன் !
வரிசையில் நிற்கிறது கனவுகள் உண்மையாக
இவைமட்டும் நடந்தாலே இன்பத்தில் மிதப்பேன் !
------------------------------------------------------------------------
பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (26-Nov-16, 7:49 am)
Tanglish : enathu kanavugal
பார்வை : 132

மேலே