என்னருகே நீ இருந்தால் 555
உயிரானவளே...
உன்னை காணுமுன்
கோடைகாலத்தில்...
பனிப்பிரதேசத்தில் இருக்க
ஆசைப்படுவேன்...
குளிர்காலம் வரும்போதெல்லாம்
நெருப்பின் பக்கம் நிற்க ஆசைப்படுவேன்...
இப்போது எந்த
காலத்திலும்...
உன் பக்கமே நிற்க
ஆசைப்படுகிறேனடி நான்...
என் ஆசை
நிறைவேறுமா கண்ணே.....

