ஒரு கற்பனைக் கதை கேஷ் லேஸ் எக்கனாமி
ஒரு கற்பனைக் கதை ..
கேஷ் லேஸ் எக்கனாமி ..
ஸ்கூலுக்குச் சென்ற ஒரு செல்வந்தரின் மகன் ஸ்கூல் முடிந்து இரண்டு மணி நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. அதிர்ச்சியடைந்த செல்வந்தரின் மனைவி கணவனுக்கு அதை தெரிவிக்க, செல்வந்தர் இல்லத்திற்கு விரைந்து வந்து, அவரது டிரைவரை விசாரிக்க அவன், ஸ்கூலுக்குப் போய் காத்திருந்ததாகவும், பிறகு ஸ்கூல் அதிகாரிகளிடம் விசாரித்த போது, அவர்கள் மகன் அன்று ஸ்கூலுக்கு வரவேயில்லையென்றும் தெரிவித்ததாகக் கூறியதும், செல்வந்தரும் அவரது மனைவியும் நடுங்கிப் போய்விட்டனர்.
யாரோ அவரது எதிரிகள் செல்வந்தர் மீதுள்ள பகை காரணமாக அவரது மகனைக் கடத்தியிருக்கலாமென்று நினைத்தனர்.
அப்போது .. அவரது கைபேசி ஒலித்தது. செல்வந்தர் அதை எடுத்ததும் ..
என்ன .. உங்க மகன் ஸ்கூல்ல இருந்து திரும்பி வரவில்லையே என்றுதானே கவலையடைந்திருக்கிறீர்கள் என்று கேட்க,
ஆம் .. நீ யாரு என்று செல்வந்தர் வினவ,
நான் யாரென்று தெரிந்து கொள்ளமுயற்சிக்கவேண்டாம். உன்மகனை நாங்கள் தான் கடத்தி வைத்திருக்கிறோம். உன்னிடம் ஏராளமாக கறுப்புப்பணம் இருப்பது எங்களுக்குத் தெரியும். உன்மகன் உயிருடன் வேண்டுமென்றால், என்று முழுவதும் சொல்லிமுடிக்கும் முன், செல்வந்தர்,
உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் . எங்கு வரவேண்டுமென்று மட்டும் சொல்லுங்கள். போலீசுக்கு நிச்சயமாக இன்ஃபார்ம் செய்யமாட்டோம். கேட்ட பணத்தை ரொக்கமாகவே நானே நேரில் கொண்டுவந்துகொடுத்து விடுகிறேன். எங்கள் மகனை விட்டுவிடுங்கள் என்று கெஞ்ச,
நிறுத்து .. என்ன நீ பாட்டுக்கு சினிமால வர டயலாக்கை அப்பிடியே ஒப்பிக்கிறே. யாருக்கு வேணும் உன் கறுப்புப் பணம். காலம் மாறிப்போச்சுன்னு தெரியும்ல. இனிமேல் நாங்க யாரும் கேஷா வாங்கறதில்லே ன்னு முடிவு செய்தாச்சு. கேஷ் லேஸ் எக்கனாமி வந்தாச்சு. அதனால, உன் பேங்கு அக்கவுண்டு நம்பர், பாஸ் வேர்டு எல்லாம் கொடுத்துடு போதும். உன் அக்கவுண்ட்ல இருந்து ரெண்டு கோடி ரூபா நாங்களே டிரான்ஸ்பர் பண்ணிக்கிடுவோம். சக்கஸ்புல் டிராஸ்பெர்க்கு பிறகு, உங்க மகனை வீட்டுக்கு ஓலா கார்ல நாங்களே ஏத்தி அனுப்பிடுவோம்.பயப்படவேண்டாம் என்று சொல்லவும் செல்வந்தரின் தலை சுத்தியது.
இதை அறிந்த செல்வந்தரின் மனைவி, பேசாம அவங்க சொல்லறத்தைக் கேளுங்க. பாழாப்போன கறுப்புப்பணம். இன்னும் எவ்வளவு வெச்சுருக்கீங்களோ .. யாருக்குத் தெரியும். பேசாம மீதியிருக்கும் கருப்புப்பணத்தையும் பிரதமரின் கரீப் யோஜனால போட்டுடுங்க. இருக்கிறதுல பாதியாவது ஒயிட் மணி யாயிடும். இனிமேலாவது நாம் எல்லாம் நிம்மதியா வாழ்வோம் என்றாள்.
இது ஒரு தொடக்கம் தான். முடிவல்ல.
29-11-2016