சொல்லத்தான் நினைக்கிறேன்

​​​​காலை​ ​

காலை புலர்ந்து
ஆதவன் துயர்த்து எழுந்து
ஜன்னலின் இடையில்
கண்களை சிமிட்டிக் கொண்டு​- ​எழுப்ப
சொப்பணம் கலைந்து
இமையை துடைத்து
சோம்பலை முறித்து
எழுந்த காலை அன்று

மார்ச் 22 ​- 2014 ​​பிரசாந்தின் வாழ்வில் ​மிக ​முக்கியமான நாள்​.​ ​அவன் ​கனவை நினைவாக்க​ ​இத்துணை ​​நாள்​ அவன் பட்ட கஷ்டங்களுக்கு தீர்வாக அமைந்த நாள். ​இன்று அவனுக்கு பி.எஸ்.ஜி கல்லூரியில் எம்.பி.ஏ​ ​வில் சேர்வதற்க்காக இன்டர்வியு நடக்க இருந்தது​.​ ​​என்றும் இல்​லா ​ உற்சாகம் ​
இ​ன்றும் ​அவனை ஆட்கொள்ள ​மனதில்​ சிறகு முளைத்த பறவையாய் ​பறந்து. அவன் மனதில் இருந்த பாரம் ​வெண்பனி​யாய் ​மெல்ல கரைய ​இதயம் இறகாய் இள​கி ​ ​சாலையில் சென்றது.

​சூரியனிடம் இருந்து தப்பித்து காற்றில் கரைந்து நீர் அவன் முகத்தில் பட புது உற்சாகம் பிறந்து அவன் வண்டி காற்றை கிழித்து வேகமாய் கல்லூரியை அடைந்தது. ​பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே செல்லும் போது கல்லூரியில் இருந்த விநாயகர் கோவிலில் பிராத்தனை செய்துக்கொண்டு உள்ளே சென்றான் பிரசாந்த்.

ரீசெப்சனுக்கு சென்ற பிரசாந்த் அங்கே இருந்த பெண்ணிடம் அவனின் பெயரை சொல்லி ரெஜிஸ்டர் செய்து ஐ.டி கார்டை வாங்க சிறு புன்னைகையுடன் அந்த பெண் அவனுக்கு "ஆல் தி பெஸ்ட் " என சொல்ல "தேங்க் யு" என மறு மொழி சொல்லிக் கொண்டு பிரசாந்த் அங்கே இருந்த நகர்ந்து ஒரு சோபாவில் அமர்ந்தான். ​அங்கே அவனைப் போல் இன்னும் சில பேர் அமர்ந்திருந்தனர்.

அவர்களில் ஒருவன் தான் விஜேஷ் அவன் மிகவும் பர பரப்பாய் இருந்தான், அவனுக்கு அங்கே இருந்த அமைதி பிடிக்காமல் "பட் பட்" என தான் ஷூவாழ் தரையை தட்டிக் கொண்டு இருந்தான். பிரசாந்த் அவன் கண்களை மூடிக் கொண்டு அமைதியை இருக்க சிறிது நேரத்தில் ஒரு பெண் "ஆஃப்டி வில் ஸ்டார்ட் பய் 10.30" என சொல்லி நகர அங்கே சிறு சல சலப்பு எழுந்தது. "இதற்கு மேல் பொறுக்க முடியாது" என எண்ணியவனாய் விஜேஷ் பொறுமையை இழந்த தனது மொபைலை எடுத்து பார்த்து "ஷிட் இன்னும் ஒன் ஹெர்.... " என முனங்கியவாறு திரும்ப அவன் அருகில் பிரசாந்த் அமைதியை உட்காந்து இருந்தான்.

"ஹாய் ....ஐ எம் விஜேஷ்" என சொல்லிக்கொண்டே அவனின் கையை நீட்ட " ஹாய் ....ஐ எம் பிரசாந்த்" என பதில் சொல்லிக்கொண்டு பிரசாந்த் அமைதியாய் இருந்தான். "பிரசாந்த் இப் யூ டோன்ட் மைன்ட் கேன் வி ​கொ அவுட் பார் சம் டைம்" என ​கேட்டு பிரசாந்தை ​ பார்க்க அவன் சிறிது தயக்கத்துடன் எதுவும் பேசாமல் ​தனது வாட்ச்சை பார்க்க " ப்ரோ வி ஹவ் ஒன் ஹர் சோ டோன்ட் வர்ரி" என ​மீண்டும் ​விஜேஷ் சொல்ல​​​ ​என்ன சொல்வதென்று ​தெரியாமல் இருக்க" கம் வித் மீ .. " என சொல்லிக்கொண்டு ஏல பிரசாத்தும் அவனுடன் சென்றான்.

இருவரும் கல்லூரிக்கு அருகே இருந்த ​கடைக்கு சென்றனர்​.​ பிரசாந்த்​ தனக்கு ​எதுவும் வேண்டாம் என ​சொல்லும் முன் ​ விஜேஷ் இரண்டு கோக்​ பாட்டிலுடன் ​வந்து நின்றான். பிரசாந்த் எதுவும் பேசாமல் குடிக்க ஆரம்பி​க்க​ விசேஷ் சிகரெட் பாக்கெட்டை பிரசாந்த்திடம் ​நீட்டினான் ​ " சரி ஐ டோன்ட் ஸ்மோக்கி " என சொல்ல விஜேஷ் சிகரெட்டை ​புகைக்க ஆரம்பித்தான் அப்போது விஜேஷ் புகைத்தவாரே "நீங்க எந்த காலேஜ் "​
​"​​கிருஷ்ணா என சொல்ல சிறிது அமைதிக்கு பின் பிரசாந்த் ​"​நீங்க​ எந்த காலேஜ் ​" என வினாவ "​பார்க்...." என சொல்லி முடித்த பின் ​"​ஏன் இந்த காலேஜ் ச்சூஸ் பண்ணுனிங்க "என விஜேஷ் கேட்க அந்த கேள்வி கேட்டு அதிரிந்தவனைய் "பி.எஸ்.ஜி இஸ் மைய் ட்ரீம் அண்ட் இட் இஸ் பெஸ்ட் போர் எம்.பி.எ " என பிரசாந்த்​ சொல்ல ​ "​குட்" என புகையை உதியாவாறு ​சிகரெட்டை கீலே போட்டு அனைத்தான்​ ​விஜேஷ்​

இருவரும் கல்லூரியை நோக்கி ​நடந்து வர கேட்​டின்​ அருகில் வரும் போது
மயில் இறகு காற்றில் தவழ்ந்து வருவதை போல்
நிலவு பெண் உருவம் கொண்டதைப் போல்
காற்றில் ரோஜா கலந்ததைப் போல்
குவளையை ஆடையாய் நெய்து உடுத்தி வந்ததை போல்
ஒரு பெண் விஜேஷ் கடக்க மின்னல் தீண்டியவனைய் கண் சிமிட்டாமல் சுவாசிக்க மறந்தது சிலையாய் நின்றான்.

இதை அறியாமல் பிரசாந்த் தனது போ​னில் பேசியவாறு ​அவனுடன் வந்து கொண்டு இருந்தான். தனது போன் காலை முடித்து விஜேஷை பார்க்க அவன் பார்க்கிங்கை ​நோக்கியவாறு​ நின்று கொண்டு இருந்தான். ​" விஜேஷ்.... இட்ஸ் டைம்​ ​போலாம்" என பிரசாந்த் சொல்ல " ஹான​ ...​போலாம்...​போலாம் "என விஜேஷ் சொல்ல இருவரும் உள்ளே சென்றனர்.

சிறிது ​நேரத்திற்குள் ​ஆப்டி ஆரம்பித்தது சுமார் இரணூறு ​பேருக்கு மேல் தேர்வு எழுத ஆரம்பித்தனர்​.​ விஜேஷ் முதல் ​டேபிளில் அமர அந்த பெண்ணின் முகம் ​அவன் நினைவலையில் மிதந்து ​அந்த சந்தோசத்தில் கொஸ்டின் பேப்பரை பார்க்க அது வரை இருந்த ​சந்தோசம் மெல்ல மறைந் முகத்தில் பீதி கொள்ள ஆரம்பித்தது​. விஜேஷ் ​பின் திரும்பி பிரசாந்​த் எங்கே என பார்க்க அவன் பதில் எழுதுவதில் ஆர்வமாய் ​இருந்தான். பிரசாந்த் எழுதுவதை பார்த்ததில் மனதில் சிறு பொறாமை ஏல அப்போது விஜேஷ்ன் டேபிளில் "டட் டட் "என ஓசை வர திரும்பி ​மேலே பார்த்தான் "இவள் இங்க ப்ரோபஷார்ரா...எப்பா என்ன பிகரு" என மனதில் எண்ணிக் கொண்டே ​எழுத ​தொடங்கினான்.

பிரசாந்த் மிகுந்த உற்சாகத்துடன் எழுத விஜேஷோ உற்சாகம் ​குன்றி சோகத்தில் ​எழுதிக் கொண்டிருந்தான்,​ நேரம் செல்ல செல்ல அவனும் தீவிரமா​க எழுதினான் இருந்தும் ​அவனால் சில கேள்வி​களுக்கு ​பதில் எழுத​ முடியாமல்​ சோகமாய் வெளியே வந்தான்,​ வெளியே பிரசாந்த் மிகுந்த ​ ​சந்தோஷத்துடன் ​உற்சாகமாய் நின்​க்க, அவனை பார்த்த போது விஜேஷ்​க்கு​ கடுப்பில் முகம் ​சிவந்தது " விஜேஷ் எப்படி பண்ணுனிங்க "என பிரசாந்த் கேட்க அவனின் அப்பாவி தனமான முகத்தை பார்த்து அவனின் கோபம் குறைந்து பெரு மூச்சு விட்டு "அதுவா பரவா​ ​இல்ல ....நீ எப்படி பண்ணுன"​ ​"ரொம்ப ஈசியா இருந்துச்சு " என மிகுந்த சந்தோசத்தில் பிரசாந்த் சொன்னான். "சரி வா தம் அடிச்சுட்டு வரலாம்​"​ என விஜேஷ் சொல்ல சிறு தயக்கத்துடன் " விஜேஷ் எனக்கு அங்க நிக்கிறதுக்கு ஒரு மாதிரி இருக்கு​,​ நீங்க வேணா போயுட்டு வாங்க நான் இங்க வெயிட் பண்ணுறேன் " என பிரசாந்த் சொல்லி முடி​க்க ''ஹ்ம்ம் ... கான்டீனிக்கு ஆச்சு போலாமா​"​ என​ அவன் ​கேட்க " ஹ்ம்ம் ...போலாம்​"​ என பிரசாந்த் ​சொல்ல இருவரும் நடக்க ஆரம்பித்தனர்​.

​ " பிரசாந்த் ​உன் ​ பக்கத்துள்ள ஒரு பொண்ணு ​உக்காந்துட்டு ​இருந்துச்சே​ அவளை ​ பாத்தியா"
"எங்க "
" ......எக்ஸாம் ஹால்ல​ தான்​ "
​"​இல்ல விஜேஷ் நான் யாரையும் கவனிக்க​ல்லையே " என மீண்டும் அப்பாவி தனமாக பதில் சொல்ல​.​ ​
"இப்படி கூடவா ஒருத்தன் இருப்பான் ...அந்த பொண்ணு இவன் முன்னாடி வந்தா கூட கவனிக்க மாட்டான் போல இருக்குதே..." ​​​என ​​விஜேஷ் அவன் மனதில்​ நினைத்துக் கொண்டு நடந்தான்.

​கான்டீன் ​உள்ளே சென்ற போது விஜேஷ் அதிர்ந்து நின்றான் அப்போது அவனுள் "இது காலேஜ் கான்டீனா இல்ல பூட் கோர்ட்அ ... எங்க பார்த்தாலும் கபில்..கபில் உட்காந்து இருக்கானுங்க...​" என சொல்ல. ​ஆமாம் அவன் யோசிப்பது ​சரி தான் அந்த காலேஜ்ல் பாய்ஸ் கேல்ஸ் ரூல்ஸ் கிடையாது ​அங்கே எல்லோரும் சகஜமாய் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தனர் அவர்களுக்குள் இடைவெளி இல்லாமல் ​இரு தேகங்களும் ஒட்டியவாரு அமர்ந்து இருந்ததை பார்த்த விஜேஷ்க்கு கொஞ்சம் ​​​பொறாமை​ எழுந்தது​, அதை வெளிக் ​​கா​​​ட்டாமல் ​அங்கே இருந்த ​பெண்களை ரசித்தவாறு ​​இருவரும்​ ​​ஒரு டேபிளில் அமர்ந்தனர்.​ ​

விஜேஷ்"நீ நிச்சயமா அவள பார்க்கலையா" பிரசாந்த் அவனை ஊற்று நோக்கி​ ​
" நான் எதுக்கு பொய் சொல்லணும் ​எனக்கு எழுதவே டைம் கரெக்ட்அ இருந்துச்சு" என ​சொல்ல விஜேஷ் சேரில் இருந்து எழுந்தான் ​
" உனக்கு என்ன வேணும் "என கேட்க ​ ​
" கபே இஸ் பைன் "​ என ​சொல்​ அவனின் மொபைல் போன் அடிக்க " சொல்லு மா... ஈசி தான் இருந்துச்சு ...." என தன் தாயிடம் பேச ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் விஜேஷ் ​ஒரு டிரேஉடன் வந்தான்." பாத்துட்டே இருக்க .கொஞ்சம் பிடிங்க பிரசாந்த் " என அப்பாவித்தனமாய் விஜேஷ் பேச பிரசாந்த் டிரேயை ​டேபிளில் வைத்தான். இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர் அப்போது " எஸ்சுஸ் ... ஹலோ ..."என குரல் கேட்க விஜேஷ் மேலே பார்க்க .... ஐஸ் கட்டி போல் உறைந்தான்..."​​எஸ்சுஸ்​ மீ ... பிரசாந்த்.." என மீண்டும் ஒரு குரல் ஒலிக்க இப்போது பிரசாந்த் மேலே பார்க்க மஞ்சள் நிறம் சுடிதார் அணிந்த பதுமை நின்று கொண்டு அவனையே பார்த்துக் கொண்டு இருந்தால்.

திசு பேப்பரால் தனது இதழை அவசரமாய் துடைத்து கொண்டு விஜேஷ்​ ​பேச​ ​ஆரம்பிக்க ​​அவள் " ஐ திங்க் யூ மிஸ்ஸட் யூர் ஐ.டி கார்ட் இன்சைட்" என அவள் சொல்லி முடிக்க. அவளை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தான் அவள் மறுபடியும்" ​எஸ்சுஸ்​ மீ..." சொல்ல ​உயிர் பெற்ற மீனைப் போல் பிரசாந்த் தனது ​தோள் ​பாக்கை தேடினான்​ ... சிறிது ஏமாற்ந்தவனாய்... "யா தட்ஸ் மெயின்.. தங்க யு.... " என சிறு புன்னைகையுடன் கையை நீட்ட அவன் கையில் ஐ.டி கார்ட்​டைய் ​வைத்துவிட்டு அவள் நகர்ந்தாள். ​ ​

​இத்தனையும் சில நொடியில் நடந்து முடிந்தது ​ஆ​னால் பிரசாந்த் அதில் இருந்து மீளாமல்​ ​அவளையே எண்ணிக்கொண்டு அமைதியை ​இருந்தான்.​அப்போது விஜேஷ் " பிரசாந்த் நான் சொன்னானே ​.....​பொண்ணு ​..... ​அது இவ தான்​"​ என மெல்லிய குரலில் ​சொல்ல சுய நினைவு வந்தவனை "​எந்த பொண்ணு " ​​அவ தான் ​....​உன் ப​க்​கத்துள்ள உட்காந்​துட்டு இருந்த பொண்ணு " என விஜேஷ் ​சொன்னதை கேட்டும் கேளாமல் அவள் ​அமர்ந்து இருந்த டேபிளை​யே​ பார்த்து​க்​கொண்​டு​ இருந்தான்.

​இருவரும் அந்த பெண் குவளையை நினைத்துக் கொண்டு அமைதியாய் உணவை கொறித்துக் கொண்டு இருந்தனர். பிரசாந்தின் உள்ளம் சிறிது குழப்பம் ​அடைத்தது இருந்தும் அவளின் வசீகர பார்வை அவனை மயங்க செய்தது. விஜேஷ் எப்படியோ அவளின் மொபைல் நம்பரை வாங்கிவிட வேண்டும் என எண்ணிக்கொண்டு இருக்க. "பொறுத்தது போதும் பொங்கி ஏழு" என அவன் மனம் சொல்ல உற்சாகத்துடன் எழுந்து அப்பதுமைகள் அமர்ந்து இருந்த டேபிளை நோக்கி நடந்தான்.

அவனை தொடர்ந்து ப்ரசாந்த்தும் நடந்தான். விஜேஷ் அவர்கள் டேபிளில் இருந்த சேரில் அமர்ந்தான். அந்த மஞ்சள் புதுமையும் அவளின் தோழியும் விஜேஷை கவனிக்க , அவளின் தோழி கோபமாய் அவனை பார்க்க அவளை கவனிக்காமல் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தான் விஜேஷ். பொறுமை இழந்த அவளின் தோழி " ஆர் யு லாஸ்ட்... இங்க நாங்க உக்காந்துட்டு இருக்கோம் தெரியலையா என கேட்க.... " நோ ஐ அம் நாட் லாஸ்ட்...நான் விஜேஷ் இது என்னோட பிரெண்ட் பிரசாந்த் என சொல்லிக் கொண்டு மேலே பார்க்க பிரசாந்த் அங்கே காணவில்லை இருந்தும் " ஐ ஜஸ்ட் கேம் ஹேர்... டு பி வித் யு பிரெண்ட்" என விஜேஷ் முடிக்க
" உனக்கு என்ன தெரியுமா... "
" நோ "
" அப்போ இவளை தெரியுமா ..."
" நோ"
" தென் மூவ் யுவர் ஆஸ் பிரம் ஹேர் " என அவள் கோபமாய் சொல்ல
" கூல்...கூல் ...." என சொல்லிக் கொண்டு அங்கே இருந்து விஜேஷ் நகர்ந்தான்..

​விஜேஷ் வெளியே வர பிரசாந்த் அவனிடன் எதுவும் பேசாமல் நிற்க அவன் உணர்வை உணர்ந்து " சாரி ப்ரோ...சும்மா காலாய்க்கலமுன்னு தான்..... வா போலாம்" என சொல்லி கொண்டு பிரசாந்தின் தோளில் கையை போட்டு நடந்தான்.

எழுதியவர் : ரவி சங்கர் (29-Nov-16, 12:00 am)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 513

மேலே