சுவைஸ்ரீ
ஏண்டா தம்பியை அழகரசா
நீ கல்யாணம் பண்ணிட்டு ஒடனே பதவி உயர்வு கெடச்சு கல்கத்தாவுக்குப் போயி அஞ்சு வருசம் கழிச்சுத்தான் நம்ம மாநகருக்கு மாத்திட்டு வந்திருக்கிற. பாப்பா பொறந்ததுபத்தி தகவல் சொன்ன. பாப்பா படத்தையும் அனுப்பி வச்ச. பாப்பாவுக்கு படத்தில இருக்கறத விட நேரில ரொம்ப அழகா இருக்காடா.
@@@@
நான் உன்னோட பெரியப்பாடாச் செல்லம். உம் பேரென்னடாச் செல்லம்?
@@@@
எம் பேரு சுவைஸ்ரீ பெரியப்பா.
@@@@@
என்னடா தம்பி பாப்பாவுக்கு தமிழும் இந்தியும் கலந்த கலப்படப் பேரா வச்சிருக்கா?
@@@
என்னங்க அண்ணே இப்பிடி சொல்லறீங்க? தமிழர்கள்ல 98% பேர் தூய இந்திப் பேருங்களத்தான் வச்சிருக்காங்க. உங்க மாதிரி ஒரு 2% பேர்தானே தூய தமிழ்ப் பேர வச்சிருக்காங்க. என்னோட ஒடம்பில தமிழ் குருதி (ரத்தம்) ஓடுது. அதே சமயம் உலகம் போற போக்கில போறதுதானே அறிவுடைமை? நான் பாப்பாவுக்கு சுவைஸ்ரீ -ன்னு பேரு வைக்கிறதுக்கு இன்னொரு காரணமும் இருக்குதண்ணே. வங்காளிகள் காலைல பல் தீட்டின ஒடனே இனிப்பான பண்டம் எதையாவது சாப்பிட்டதுக்கு அப்புறம்தான் காலை சிற்றுண்டியே சாப்பிடுவாங்க. இப்ப சொல்லுங்கண்ணே நான் பாப்பாவுக்கு சுவைஸ்ரீ -ன்னு பேரு வச்சது தப்பா?
@@@@@
பரவால்லடா தம்பி அழகரசா. பாபபாவோட முதல் பாதிப் பேராவது தமிழ்ல இருக்குதே அதுக்காக நா ரொம்ப மகிழ்ச்சி அடயறண்டா.