நூல்

ஏதோ ஒரு நூலைப் படித்துக்கொண்டிருந்தாள்!
என்னையும் ஏதாவது ஒரு
நூலை எடுத்து படிக்கச் சொன்னாள்!
நான் பதிலளித்தேன்
"நானும் ஓர் நூலைப்
படித்துக்கொண்டுதான் இருக்கேன்.
எடுத்துக்கொள்ளட்டுமா?" என்று.
புரிந்துகொண்டுவிட்டாள் போலும்
வெட்கத்தை வீசி என்னை எடுத்துக்கொண்டாள்.
இப்பொழுது அவள் கையிலுள்ள
ஓர் நூலாய் நான்
புரட்டிக்கொண்டிருக்கிறாள்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (29-Nov-16, 9:38 pm)
Tanglish : nool
பார்வை : 79

மேலே