இப்படியும் இருக்கலாம் மருதுபாண்டியன் க
இப்படியும் இருக்கலாம். . . .
இரவு
மேகத்தில்
ஆங்காங்கே
தெரியும்
நட்சத்திரங்கள்
தோற்றுவிடுமோ
அவன்
மேனியிடம் . ...
ஐயம்கொண்டு
மலர்ந்து பூத்திருந்தது
அந்த மாலை நேரப்பூங்கா. . . .
அவன்
கருப்பு நிற
கிழிசல் ஆடையில்
வெண்ணிற மேனி
ஒளிந்து கொண்டிருந்தது!
ஆறடி
அழகன் அவன்
அழுக்கு மூட்டையின்
மேல்
தலைநட்டு
தானாக சிரித்து கொண்டிருந்தான். . . .
தண்ணீர்
தழுவும் மீனும்
மிதக்கும்
அலை கொஞ்சும்
படகும் . .
அவன்
ஐந்து விரல்கள்
அசையும்
அழகை
கண்டு
தென்றலும்
திரும்பியதே!!
ஏழு
நிறங்களில் எது
அழகோ?
அதுவும்
தோற்றுவிடும்
அவன்
கால்சட்டை
அழுக்கிற்கு. . . .
அவனருகில்
செல்லும்
ஈக்களிடம்
சத்தமிட்டான்
நகர்ந்து போ. .
நகர்ந்து போ. .
சற்று நேர
என்
பார்வையில்
அவன்
செய்கையிலே
இப்படியோ.. ..
தென்றலிலே
அவளை
வரைந்து . . .
திசையெல்லாம்
சுவாசக்காற்றில்
திரையிட்டு . . .
தினம் தினம்
ரசிக்கும்
கலைஞன் அவன் . . .
சற்று
அவன்
விரல்களால்
அவள்
கூந்தலை
வருடுகிறான்
புன்முறுவல் ஏந்தி. . ....
வழிபோக்கர்கள்
கண்டு
பாவம் பைத்தியம்
என்றார்கள் . . .
அந்த ஈக்களைப்போல். .
சற்று
நகர்ந்து செல்
என்
ஓவியத்தை
தீண்டிவிடாதே
என்று
கத்தினான் . . .
ஆம்
அந்த
காதல் பைத்தியக்காரன் . ..
மருதுபாண்டியன். க