புரியவில்லையடி பொருளாதாரக் கணக்கு பொன்னுத்தாயி

வெள்ளை விழியில் கருப்பு விழியை உருட்டுகிறாய்
புன்னகை உதட்டில் முல்லை வெள்ளையாய் சிரிக்கிறாய்
கறுப்பிலும் வெள்ளையிலும் கவிதையாய் நடக்கிறாய்
பணத்தில் கருப்பு என்னடி வெள்ளை என்னடி
புரிய வில்லையடி இந்தப் பொருளாதாரக் கணக்கு
கருங்குழல் காற்றிலாட கட்டியணைத்தால் நீ எனக்கு கறுப்புப் பணமடி
வெண்மைச் சிரிப்பில் ஓடி வந்து ஒரு இச் தந்தால் எனக்கு நீ வெள்ளைப் பணமடி
இந்த மாமனுக்கு தெரிந்த பொருளாதாரக் கணக்கு இது தானடி என் பொன்னுத்தாயி !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Dec-16, 9:49 am)
பார்வை : 127

மேலே