மழை மழை
மழை! மழை!
மனம் மகிழ
மண் குளிரப் பெய்யும்
மழையே ! உன்
வரவு நல்வரவாகுக.
சூல் கொண்ட
மேகம்
மடி திறந்து
பன்னீர் துளிகளைச்
சிந்துகிறது..
நீலவானம்
கருநிற ஆடை
புனைந்து. எங்கள்
பகற் பொழுதை
இரவாக்கி
ஓய்வைத் தருகிறது...
நிலம் கொண்ட
தாகம் தணிந்தது.
வெம்மையால்
வெம்பிய பயிர்கள்
நீரை உண்டு
பசி ஆற்றிக் கொண்டது.
.புழுதியால்
அழுக்கேறிய மரங்கள்
குளித்துக்
குதூகலிக்கின்றன.
நீயும்
முந்தைய ஆண்டைப்
போல்
கோரத்தாண்டவம்
ஆடாமல்
நிறைவாக பெய்து
செழிப்பூட்டிச்
செல்வாய் மழையே!
மீனாகோபி.