என் இந்த நாட்களில்

ஏங்குகிறேன் பின்னிருந்து நீ அனைக்க…
ஏங்குகிறேன் நீ என் கன்னத்தில் முத்தமிட…
ஏங்குகிறேன் வாந்தி எடுக்கையில் என் நெற்றியைப் பிடிக்க…
ஏங்குகிறேன் நம் செல்ல மகனின் இதயத்துடிப்பை நீ கேட்க்க…
அசைவுகளை உன்னுடன் சேர்ந்து உணர…
அன்பாய் எங்கள் இருவரையும் தடவி குடுக்க..
வளையல் பூட்டி சீர் வரிசை செய்து தாய் வீட்டில்
பொம்மையாய் நான் ஏங்குகிறேன் உன் நினைவுகளோடு…
தாய்மை உணர்வை விட மனைவியின் உணர்வை விட..
காதலியாய் உன் நினைவுகளில் ஏங்குகிறேன் என் இந்த நாட்களில்..