நிர்வாணம்

ஒன்றுடன் ஒன்று எப்பொழுதும்
உரசிக் கொண்டு எப்படி
உன்னால் மட்டும்!

எங்கு பார்ப்பினும்
நீ துவக்கமனால்
எப்படி பார்த்து முடிப்பேன்!

எத்தனை சுகங்கள்
மழை வெயில் குளிர் என்று
அனுபவித்துக் கொண்டே போகி்றாய்!

இதோ பார்
மீண்டும் மீண்டும் இப்படியே
ரசிக்க வைக்கிறாய்
முகத்தைத் திருப்பாமல்
போதும் !

கட்டியணைத்துக் கொண்டு
பிணமாகி்ட போகிறேன்!

எத்தனைப் பேர் தான்
உன்னைக்கா தல் கொள்ள,
பொறாமை அதிகம்
உன்னை நான் மட்டும் சொந்தம்
கொண்டாடிட !

முதலில்,
வெட்கத்தில்
இலைகளாய் உதிர்வதை நிறுத்து,
மெதுவாக
அசைந்து என் மீது விழும்
நிழலை நிறுத்து! நிறுத்து!

என் மனம் சலனம்
ஆகிக் கொண்டே போயிகிறது
யார் உன்னை ரசித்தாலும்
கோபம் வராமல்
அவர்களையும் ரசிக்கத்
தோன்றுகிறது !

உன் மீதான ஒரு தலைக் காதல்
நான் மட்டும் ரசிப்பேன்!
அனுபவிப்பேன்!ஏனென்றால்,

உன் நிர்வாணம் மட்டும்
என் நிவாரணம் !

"என் நிவாரணம்!இயற்கையின் நிர்வாணம்!"

எழுதியவர் : பானு மா (10-Dec-16, 3:24 pm)
Tanglish : nirvanam
பார்வை : 2456

மேலே