வாசனை கூட்டிடும்
காற்றி லாடிடும் மெல்லியப் பூங்கொடி
****காட்டுப் பாதையில் வாசனைக் கூட்டிடும் !
ஆற்றில் துள்ளிடும் சேலொடு கெண்டையும்
****ஆழம் கண்டிட ஆவலாய் நீந்திடும் !
சேற்று நீரினில் தாமரைப் பூவிலே
***தேனை யுண்டிட வண்டுகள் சுற்றிடும் !
நாற்று நட்டிடும் நங்கையர் கால்விரல்
****நண்டு கவ்விட கூக்குர லோங்குமே !