நிர்வாணம் மறைக்க முயற்சிக்கிறேன்
ஆணென்றால் பெண்ணின் ஆடை நீக்கி, நிர்வாணம் காணத் துடிக்கிறான்.
பெணென்றால் ஆண்ணின் ஆடை நீக்கி நிர்வாணம் காணத் துடிக்கிறாள்..
அப்படி என்ன இருக்கிறது அதில்?
சதைகளால் செய்த பிண்டங்கள் தானே...
மனிதனென்றால் இயற்கையை நிர்வாணமாக்கி இரசிக்கிறான்.
என்னவொரு கேவலமான புத்திடா???
இயற்கையின் ஆடைகளாகிய மரங்களை வெட்டி அழித்தான்.
மழை பொய்த்தது..
ஆற்றுநீரை உறிஞ்சி விற்பனை செய்கிறான்.
மணலையும் கூவி கூவி விற்பனை செய்கிறான்...
நிலத்தில் சுரங்கம் தோண்டி வைரமும், தங்கமும் தேடுகிறான்..
மண்ணிலுள்ள தாதுக்களையெல்லாம் உறிஞ்சிக் கொண்டிகிறான்...
இரசாயண உரங்களால் மண்வளம் கெடப் பாடுபடுகிறான்...
இவ்வாறு தன் ஆடம்பர வாழ்விற்காக இயற்கையை நிர்வாணமாக்கிக் கொண்டிருக்கிறான் இந்த மானிடன்...
ஆம். இயற்கைத்தாய் நிர்வாணமாக இருக்கிறாள்...
மாசுற்று கலங்கமுற்றிருக்கிறாள்...
அவளைக் கண்டு இரசிக்கத் தோன்றவில்லையே எனக்கு...
பாவப் படுகிறேன் அவள் நிலை கண்டு...
என்னால் முடிந்த வரை எனது இயற்கைத் தாயின் நிர்வாணம் மறைக்க, நிவாரணம் தேடி,
மரங்களை நடுகிறேன்....