மழை பொழியாயோ மழைமேகமே

" நாத்து நட்டு பல நாட்களாகிவிட்டதே.
மேகம் மேகமாக திரண்டு வருகிறதே தவிர மழை மட்டும் பொழியவே மாட்டேங்கிறதே!. ", என்று விவசாயம் செய்யும் எனது அம்மாவின் கூக்குரல்
காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறதே...

புராதனங்களிலும், இலக்கியங்களிலும் கற்றறிந்தேன் வருணன் வந்து மழை பொழிவானென...
அப்படியெனில், அந்த வருணன் மடிந்துவிட்டானோ? என்ற சந்தேகம் மனதில் தோன்ற, மாரிக்காக மாறி மாறி வானம் பார்க்கிறேன்...
மழையை இன்னும் காணவில்லையே...

முல்லைக்கு தேர் தந்த அந்த பாரி, மாரிக்கிணையானவன் என்று கற்றேனே...
அந்தப் பாரி மரிந்தது போல, மாரியும் மரித்துவிட்டதோ??...

பதில் தாராயோ கருமேகமே??...
மழை பொழியாயோ மழைமேகமே??...

உயிர்களின் தாகம் தணிக்க அவ்வப்போது வந்து பொழிந்துவிட்டு செல்லும் நீ,
விவசாயத்திற்காக மனமிரங்க மாட்டாயோ???...

நல்லார்க்குப் பெய்யும் மழை எல்லாருக்கும் பெய்யுமென்ற வள்ளுவன் வாக்கும் பொய்யோ???....

சமநிலை தவறி பெய்கின்றாயே...
சில இடங்களில் அதிகமாகவும்,
சில இடங்களில் குறைவாகவும் பெய்து
ஏன் பாகுபாட்டை வெளிப்படுத்துகிறாய்??...

மனசாட்சியில்லா மனிதர்களைப் போல் நீயும் மாறிவிடாதே..
விரைந்து மழை பொழிவாயாக...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Dec-16, 7:50 pm)
பார்வை : 1845

மேலே