வானவில் மகளே
தேவதை மகளே :
தேவதைத் திடலில் வந்த வானவில்
மகளே...
பூவென பொழியும் வண்ணப்புன்னகை
மழையே..
குறுநகை அன்பில் மெல்லச் சிரித்திடும்
விழியே..
மழலையின் மொழியில் என்னை...
வலம்வரும் முகிலே..
நீ பிறந்ததும் உணர்ந்தேன் இவ்வுலகமே
அழகே...!
-சிவமணி