நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
======================================

நிலவையும் , மினுக்களையும்
நினைவிருத்தும்
நகர வெளிச்சமற்ற இரவு வேண்டும்
பறவைகளை, பறத்தலை
செவியிருத்தும்
மேகக்கூழில்லாத
தூயவானம் வேண்டும்
வழிதேடும் கால்களுக்கு
வலுவிழத்தல்
தொலைவில் வேண்டும்
இரைச்சலில் நிசப்தம் வேண்டும்
பனித்துளி புணரும்
புல்வெளிகளின்
அசதி முறிக்கும் ஓசைவேண்டும்
பூக்களில் ஒளிப்படும் வாசனை வேண்டும்
ம்ம்மௌனநிறம் பொழிந்துவிட
வெள்ளைத்தாட்களில்
வெறுமை வேண்டும்
குலைவிழி காண
வேலிதாண்டிய துடிப்புகள் வேண்டும்
என் உயிரிற்கு என் உடற் மேல்
காமம் வேண்டும்
ஆசைகளை அடைத்துறங்க
நெரித்தலில்லாத
கல்லறை வேண்டும்
நீரிருந்தும் தாகம் வேண்டும்
எங்கோ நீயிருந்தும் தனிமைவேண்டும்

(நின்னையே நினைவுறுத்தும்) தனிமைவேண்டும்



"பூக்காரன் கவிதைகள் "

எழுதியவர் : அனுசரன் (16-Dec-16, 7:58 am)
பார்வை : 238

மேலே