கண்முன் தற்கொலை
ஆதிக்கம் செலுத்த
பிறந்தவன் நான்
அன்பால் என்னை
ஆதிக்கம் செலுத்துகிறாய் - நீ
கர்வம் கொண்டு
வாழ்ந்தவன் நான்
கண்களால் எந்தன்
கர்வம் எரித்தாய் - நீ
துணிவை அடையாளமாய்
கொண்டவன் நான்
துணிவில்லை சொல்லிவிட
என்காதலை எதிரே - நீ
உன்னோடு எந்தன்
காதலை வார்த்தைகளாய்
வடித்து என்னுள்
சிறை வைத்தேன்
என்னை தாண்டி
உன்முன் தற்கொலை
செய்து கொள்ள துடிக்கிறது

