நீ

கண்ணதாசன்
எழுத மறந்த
கவிதை நீ!

பாரதியும்
பாட மறந்த
பாடல் நீ!

இளையராஜா
இசைக்க மறந்த
இசை நீ !

ஷாஜஹான்
கட்ட மறந்த
தாஜ்மஹால் நீ!

டாவின்சி
வரைய மறந்த
ஓவியம் நீ!

கம்பனும்
படைக்க மறந்த
காப்பியம் நீ!

ஷேக்ஸ்பியர்
படைக்க மறந்த
நாடகம் நீ!

ரோமியோ
காதலிக்க மறந்த
காதல் நீ!

பிரபு தேவா
ஆட மறந்த
நடனம் நீ!

ஜானகியும்
பாட மறந்த
பாடல் நீ!

இவர்கள்
மறந்ததால்
இன்று எனக்காய் நீ!த.மணிகண்டன்......

எழுதியவர் : தங்கமணிகண்டன் (15-Dec-16, 11:03 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
Tanglish : nee
பார்வை : 196

மேலே