அவளை பற்றி சொல்கிறேன்

என்னோட கவிதை நல்லாருக்கா
.......
.......
அவளை பற்றி சொல்கிறேன்
.
பட பட வென்று பேச்சி
.
பாதம் பூமியில் பட்டும் படாமலும் நடக்கும் நடை
முத்தம் அவள் பாதம் தருகிறது அவள் கால் படும் இடம் அதனால் பூத்து விடுகிறது
.
பார்ப்பவரை பக்கத்தி கொண்டு
கையெடுத்து கும்மிடும் அளவுக்கு
அவளோட உடை

.
மின்னல் மின்னி மறையும்
நேரத்தில் வரும் வெளிச்சம் போல் அவள் புன்னகை
.
மின்னலை பார்த்தவர்
கண்களை இழக்கும் சக்த்தி மின்னலில்
இவள் புன்னகை பார்த்த
ஆண்களின் மனதை மயக்கும் யுக்தி அவள் புன்னகையில்
.
கோபம் கூட அவளுக்கு வந்தால் அந்த கோபம் கூட கோடி அழகென்று மாறி போகும்
ஆவலுடன் கோபம் கலந்ததால்
.
வெட்கம் பற்றி சொல்லவே வேண்டாம்
அவள் வெட்கம் கொண்டு தன் கால் கட்டை விரலால்
தரையில் போடும் கோட்டினை
நான் கோலம் என்று சொல்வதா
இல்லை கண்ணை திருடும்
வானவில் என்று சொல்வதா
புரியாமல் நிக்கிறேன்
.
அவள் வெட்கத்தில் கழுத்தில் கிடைக்கும் தங்க செயின்
கடிக்கும் பொது
நான் பக்கத்தில் நிக்கிறேனா
இல்லை
சொர்க்கத்தில் பறக்குறேனா
என்றே தெரியவில்லை
.
செடியில் பூத்த பூவை கூந்தலில் வைத்து கொள்ள அவள் செடியில் இருந்து பறித்தால்
அனால் அவள் பறித்து
வைத்த பின்பும்
அந்த பூ செடியில் தான் இருக்கிறது என்றே தோன்றுகிறது
காரணம் அது வாடவே இல்லை
.
பூக்களை பறித்தால் கண்ணீர் விடும் என்று நினைத்தேன்
அனால்
இவள் கூந்தலில் வைத்து கொள்ள வில்லை என்று தான் கண்ணீர் விடுகிறது என்று புரிந்தேன்
நானும் பூவாகலாம் என்று கூட யோசித்தேன்
.
உறங்கும் அழகை பாத்தி்ட நான் உறங்காமல் இருக்கிறேன்
அனால் அவளை பார்த்ததும் மயங்கி உறங்கினேன்

.
நெற்றிப்பொட்டு அந்த நிலாவை புட்டு
வைத்து இருக்கிறாளோ என்று யோசிக்க தோணும்
.
கையில் மருதாணி வைத்து உள்ளேன் என்று என் முன் காட்டினாள்.
நான் கொளம்பி போனேன்
உன் கை ரேகை கூட மருதாணி தானே என்று
ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல்
.
நான் உனக்காக கவிதை
எழுதி இருக்கேன் என்றால்
அவள் என் பெயரை முதலில் எழுதி இருந்தால்
அவள் கை பட்டதாலோ என்னமோ
என் பெயர் எனக்கே பிடிக்கிறது
.
அவள் குளிக்கும் அழகை பார்த்தேன்
அப்பொழுது தான் நான் கோபத்தின் எல்லைக்கே போனேன்
சூரியன் மறையாமல் ரசிக்கிறது
மேகம் கரையாமல் ரசிக்கிறது
கோபம் கொண்டேன்
சண்டை போட்டேன்
எல்லாருக்கும் முன்பில் அல்ல
இயற்க்கையுடன் போர் காலத்தில்
.
நகம் வளர்ந்தால் அவள் வெட்டி வீசிடுகிறாள்
ஒரு வேலை நகத்திற்கு இதயம் இருந்தால்
வளராமல் இருக்கும் அவளை விட்டு போகக்கூடாது என்று எண்ணி
.
அழகு என்று ஒன்று உள்ளதை
அவளை கண்ட பின்பே அறிந்தேன்
அதை ரசிக்கத்தான் என் கண்கள் ரெண்டும் என்று உணர்ந்தேன்
அதனால்
நான் கனவில் கூட
என் கண்ணை திறந்தே உறங்கினேன்
.
இப்படிக்கு
உன்னை தேடியே ஓடும்
ஓடம் நானே

எழுதியவர் : திருச்சி பிரவீன் லிரிக்ஸ (19-Dec-16, 8:12 pm)
பார்வை : 702

மேலே