நினைத்தாலே சிலிர்க்க வைக்கும் அதிசயம் நீ
கார்முகில் கண்டு
மேனி சிலிர்த்து
மயில் தோகை விரிக்கும் !
பனித்துளிகள் படப்பட
சிலிர்த்துப் புல்வெளிகள்
மெல்லக் கண் விழிக்கும் !
வண்டுகள் ஸ்பரிசம்
பட்டதும் மலர்கள்
சிலிர்த்து காற்றில்
மகரந்த வாசம் வீசும் !
காதலோ,காமமோ
தொடுதல்களால்
உணர்ச்சிகள் அதிகமாய்
தூண்டப்படுகின்றன !
ஆனால் பெண்ணே !
நினைத்தாலே
சிலிர்க்க வைக்கும்
அதிசயம் அது
உன்னில் மட்டுமே
சாத்தியம் .....!