காலத்திற்கு மட்டுமே தெரிந்த விடை

கால்கள் சென்ற பாதையில் செல்ல ஆசை தான்….
துணை இன்றி.. துளி அளவும் நகர மறுகின்றன - —
உன்னைப்பற்றிய என் நினைவுகள்…
விட்டுச் செல்ல ஆயிரம் காரணங்கள் கண் முன்னே - எனக்கு எதிராக…
உன்னோடு இருக்க வேண்டும் - என்ற ஒரே காரணம் மட்டுமே என்னிடம்…!!!
வெல்வது காரணமா, இல்லை நானா…..??
எனக்கும் தெரியவில்லை…..
உன்னிடமும் இதை எல்லாம் சொல்ல நினைத்தாலும்….
நேரமோ, நெஞ்சமோ இல்லை உன்னிடம்…
நிலைத்து நிற்பதுவோ….
இறுதியாக நானும்…. என் கலையும் கனவுகள் மட்டுமே…..
புரிந்து கொள்ள நீ வர வேண்டுமென்று ஆயிரம் ஆசைகள்
அடி மனத்தில் இருந்தாலும்…..
உன்னிடம் சொல்ல…
வார்த்தைகள் மட்டும்… இல்லாமல் போய்விட்டது…
காரணம் நானா, நீயா???
காலம் மட்டுமே தெரிந்த விடையை….
நீ எவ்வாறு நிறைவேற்றுவாய்???
கற்பனையான கனவுகள் மட்டுமே … துணை கொண்டு
நடத்துகிறேன் என்….. வாழ்வை….!!!!
வேண்டாம் என்றாலும்… வேறு வழியே இல்லாமல்…..
.நீ இல்லாமல் வாழ …………
கற்றுக் கொண்டிருக்கிறேன்….
என்னையே மறந்து நிற்கின்றேன்……
தொலைந்தே போகிறேன்....