அழகு

சட்டென்று வீழ்ந்தேனடி
உம்மை கண்ட தருணத்திலே
மனம் வியந்தேனடி தோற்றத்தை கண்ட விதத்தினிலே
மேகங்களைத் திரட்டி முருக்கப்பட்ட கூந்தல்கள்
திகட்டாத கண்மனியின் சிவந்த மேனி
அதிலோ யான் கண்டிடாத பிரம்மன் படைத்த காவியம்
ஓயாது இசைமீட்டும் அவளினது இமைகள்
நிலாவினில் நட்சத்திரம் பதித்து செதுக்கிய விழிகள்
மின்னல் கள்பல கோர்த்து
வைறங் களால் தேய்து
உருக்கப்பட்ட அழகிய புண்ணகை
என்னிதயத் தோடுமெட்டுப் போடும்மவள் மெல்லிய
இதழ்கள்
பார்த்தேன்மெய் மறந்தேன் தரைசாய்ந் தேன்னன்று
முதல்யானும் கவிஞனானேன்

R. Suresh

எழுதியவர் : ரா.சுரேஷ் (19-Dec-16, 10:55 pm)
சேர்த்தது : ரா சுரேஷ்
Tanglish : alagu
பார்வை : 7944

மேலே