இனி என்னாவேனோ

மரமொத்த மனமெனக்கு
என்னை ஈர்த்த உன் விழிகளுக்குள் இருப்பதென்ன?
சினம் கொண்ட முகமெனக்கு
என்னை சிணுங்க வைத்த உன் சிரிப்பில் இருப்பதென்ன?

படபடவென வெடிப்பவள் நான்..
இன்று படபடப்புடன் நடப்பதேனோ?
திமிராய் திரிபவள் நான்..
இன்று திணறிக்கொண்டிருப்பதேனோ?

சினத்தில் சிங்கமாய் தெரிகிறான்
குணத்தில் தங்கமாய் ஜொலிக்கிறான்
அடக்கடவுளே! இவனிடம் நான் மயங்கி மயங்கி என்னாவேனோ?
மதி மயங்கி மண்ணோடு மண்ணாவேனோ?

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (21-Dec-16, 3:45 pm)
பார்வை : 104

மேலே