பதக்கு
அங்க போறானே அந்தப் பையன் பேரு என்னடா?
@@@@
அவம் பேரு பதக்.
@@@@@
என்ன பதக்கா? என்னடா வித்தியாசமான பேரா இருக்குது.
அதான் அவனோட பாட்டி அவன பதக்கு பதக்கு ன்னு கூப்படறாங்களா?
@@@@
பதக்-ங்கற பேர பதுக்குன்னு கூப்பட முடியுமா இல்ல பிதுக்குன்னு கூப்பட முடியுமா? அவன் எஞ் சின்ன மாமா பையன்டா. அவரு பீகார்ல பத்து வருசம் வேலை பாத்துட்டு போன மாசந்தான் மாற்றலாகி தமிழ் நாட்டுக்கு வந்தாரு. "என்னை மாமா பையனுக்கு 'பதக்'ன்னு பேரு வச்சிருக்கீங்ககளே நல்லவா இருக்குதுன்னு" கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு: எஞ் செல்ல மைத்துனா மருது, வட இந்தியாவிலே இந்திக்காரங்க பேருல ரண்டு அல்லது மூணு சொற்கள் இருக்கும். இந்தப் பதக்-ங்கற சொல் ஒரு இந்திப் பேருல ரெண்டாவது அல்லது மூன்றாவது சொல்லா இருக்கும். தமிழர்கள் வரலாற்றில யாரும் தம் பிள்ளைக்கு வைக்காத பேரா எஞ் செல்லப் பையனுக்கு 'பதக்'-ன்னு வச்சிருக்கேன்"-ன்னு சொன்னாரு. இது புதுமா, இன்னுங் கொஞ்சம் வேணுமா?
@@@@@
போதும்டா சாமி உம் பதக் புராணம்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆😃😄😊😴
சிரிக்க அல்ல.
@@@@@@@@@@@@@@@@@@
நல்ல பெயர்களுக்கு பஞ்சமில்லை,
உலகின் முதல் மொழியாம் நம் செம்மொழியில்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நன்றி: விக்கிபீடீயா: Pathak is a surname of Brahmins in North India. Usually a surname, Pathak is a Sanskrit word and means preceptor or a person who teaches.