Mood இல்ல
( ஒரு சிறுவன் பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டில் படுத்திருந்தான்.
அப்போது தான் அவனுடைய தந்தை நைட் ஸிப்ட் மில் வேலை முடித்து வந்திருந்தார்..)
அப்பா:- ஏன்டா மகனே!
சாப்பிட்டியா?
மகன்:- இல்ல.
அப்பா:- ஏன் சாப்பிடல?
மகன்:- Mood இல்ல.
அப்பா:- இன்னைக்கு உனக்கு லீவ் தானே. எங்கேயாவது விளையாட போகலாம்லா?
மகன்:- Mood இல்ல.
அப்பா:- ஏதாவது புக் படிக்கலாமே டா.
மகன்:- Mood இல்ல.
அப்பா:- ஏன்டா மகனே!
கவிதை நல்லா சொல்லுவியே
எனக்கொரு கவிதை சொல்லுடா.
மகன்:- Mood இல்ல.
அப்பா:- ( இப்பவே கண்ணை கட்டுதே )
சாரிடா மகனே! காலங்காத்தாலே உன்கிட்ட வாயைக் கொடுத்தது என் தப்புதான்..
மகன்:- நீயும் தாத்தா கிட்ட இப்படி எத்துன தடவை பேசி இருப்ப??
அப்பா:- (கடந்த காலத்தை எண்ணி பார்த்து வருந்துகிறார்.
தனது தந்தையிடம் சென்று மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்..)
நீதி:- நீங்கள் முற்பகலில் விதைத்ததை பிற்பகலில் அறுவடை செய்கிறீர்கள்..
" மனநிலை (Mood) இல்ல. ", என்ற வாக்கியம் சோம்பேறிகளுக்கு உரியது.
அதை பயன்படுத்துவதை தவிர்த்துக் விடுங்கள்...
மனநிலையை (Mood) கட்டுப்படுத்திக் கையாள கற்றுக் கொள்ளுங்கள்...
மிக்க நன்றி...