நீரசா, நீரசா

@@@@
யாரப் பாட்டிம்மா நீரசா -ன்னு கூப்படறீங்க?
@@@@
எம் பேத்திய்த்தாண்டி கூப்படறேன், மங்கை.
@@@
அண்ணன் தமிழாசிரியரா இருக்கறாரு. அவுரு போயி தாம் பெத்த மகளுக்கு தமிழ்ப் பேர வைக்காம இந்திப் பேர

வச்சிருக்காரு. தமிழ வளக்கப் பாடுபட வேண்டியவங்களே படிக்காதவங்க சினிமா ரசனையிலெ பிள்ளைங்களுக்கு இந்திப் பேர

வைக்கற மாதிரி இவுரும் செஞ்சிருக்காரே. தமிழைச் சீரழிக்கவா அரசாங்கம் இவுருக்கு சம்பளம் தர்றாங்க?
@@@@

நானும் எவ்வளவோ சொன்னண்டி மங்கை. அவந்தான் கேக்கல.

@@@@@

சரீங்க பாட்டிம்மா. நீங்க சொல்லற பேரு நீரசா இல்லங்க பாட்டிம்மா. எங்க பக்கத்து வீட்டு கொழந்த பேரு நீரஜா. அதத்தான் நீங்க

நீரசா -ன்னு சொல்லறீங்க. நீரஜா -ன்னா 'தாமரை'ன்னு அர்த்தம் பாட்டிம்மா.

@@@@

ஏண்டி மங்கை, அவ்வளவு கசட்டப்பட்டு நீரசா -ன்னு இந்திப் பேர வச்சுதுக்கு பதிலா தாமரை -ன்னு தமிழ்ப் பேரையே

வச்சிருக்கலாமே. ஏந்தாம் படிச்ச எம் மவனுக்கு புத்தி கெட்டுப்போச்சே. என்னத்தச் சொல்லறது?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல.
##########@##############
நல்ல தமிழ்ப் பெயர்களுக்கு பஞ்சமில்லை,
செம்மொழியாம் நந்தமிழில்.

எழுதியவர் : மலர் (27-Dec-16, 3:03 pm)
பார்வை : 223

மேலே