சோதனை போட அனுமதி வாங்கிட்டு வாங்க
ஹலோ யாரு பேசறது?
@@@
டேய் கத்திக்குத்து கபாலி, நாந்தாண்டா பி2 காவல் நிலைய ஆய்வாளர் கருணாமூர்த்தி பேசறேன்.
@@@#
வணக்கம் அய்யா. என்ன
விசயம் சொல்லுங்க அய்யா.
#@@@@
டேய் நீ நேத்து இரவு 7 மணிலிருந்து 8 மணிக்குள்ள பாண்டி பசாருல தனியா நடந்து
போயிட்டிருந்த பொண்ணுங்ககிட்ட கத்தியக் காட்டி மெரட்டி பத்து பவுன்னு நகயைப் புடுங்கிட்டு ஒடிருக்கற. அங்குள்ள்
கடைங்கள்ல இருக்கற சிசிடிவி படக்கருவிலெ எல்லாம் பதிவாகி இருக்குது. அதுக்காக உன்ன கைது பண்ண்ணனும். நாங்க
உன்னோட வீட்டுக்கு வரணும். உன்னோட அனுமதி தேவை. எப்ப வரலாம்னு சொல்லுடா கபாலி
. #@@@
அய்யா நான் திருடின நகைய விக்கறதுக்கு சேட்டு சோத்துலால் வட்டி கடைக்குப் போயிட்டிருக்கறேன். எனக்கு வசதிப்பட்ட நேரத்தப்
பத்தி நானே உங்களுக்குத் தகவல் சொல்லறேன். நீங்க உங்க இஷ்டத்துக்கு வந்தா அது அத்து மீறல் ஆயிடும். நா உங்க மேல மான
நஷ்ட வழக்குத் தொடர வேண்டியிருக்கும்னு உங்கள எச்சரிக்கறேன்
. #@@@ டேய் டேய், கபாலி கோவிச்சுக்காதடா. உனக்கு
வசதிப்பட்ட நேரத்தச் சொல்லுடா கபாலி.
@@@@
அய்யா நீங்க இன்னைக்கு சாய்ங்காலம் 6 மணிக்கு மெல என்ன தொடர்பு
கொள்ளுங்க. அப்பச் சொல்லறேன் நீங்க என்ன கைது பண்ண எப்ப, எங்க எத்தன மணிக்கு வர்றனும்னு
சொல்லறேன்.
@@@
சரிடா கபாலி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ #########################
முதிர்ச்சி பெற்ற சில அரசியல் தலைவர்கள்கூட வருமான வரித்துறையினர் மத்திய துணை
ராணுவ காவலுருடன் மாநில அரசின் அனுமதியின்றி தலைமைச் செயலகத்துக்குள் சென்றது
அத்து மீறிய செயல், கூட்டாட்சித் தத்துவுக்கு எதிரான செயல் என்று கண்டனக் குரல்
எழுப்புகிறார்கள். வருமான வரித்துறையினர் மாநில அரசின் அனுமதி பெற்றுச்
சென்றிருந்தால் முன்னாள் தலைமைச் செயலரின் அறையிலிருந்து கைப்பற்றப்பட்டதாகச் சொலப்படும்
கோப்புகளும் ஆவணங்களும் கிடைத்திருக்குமா? அதிகாரிகள் கோட்டைக்குச்
செல்லுமுன்பே கோப்புகளையும் ஆவணங்களையும் வெளியே கொண்டு சென்று வெவ்வேறு
இடங்களில் பதுக்கி வைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்காதா? இது கல்வி அறிவு
இல்லாதவர்களுக்குக்கூட புரியும் விடயம். இதைப் புரிந்து கொள்ளாமல் வருமான
வரித்துறையைக் குறை சொல்வோர் எந்த அரசியல் கட்சியிலும் ஒரு சாதாரணத்
தொண்டனாக இருக்கக்கூடத் தகுதி இல்லாதவர்கள்.