வரியே வல்லரசாக்கும்
இல்லாமை எங்கும் நிறைந்திருக்கிறது
இருப்பவை எல்லாம் மறைந்திருக்கிறது
தினசரி உயர்வு உயர்ந்திருக்கிறது
தவறில் மக்கள் பயணிக்கிறது
மன்னன் ஆட்சி கப்பம் வழியே
செங்கோள் கொண்டு நல்யாட்சி கண்டு
மக்கள் மகிழ்வுக்கு வழி தந்தார்
மக்கள் மன்னனை வாழ்த்தி வந்தார்
ஊதியம் பெற்று ஊமையாய் நீ இருக்க
ஊரை ஆழ்பவன் வரிநெறி முழக்க
வானும் மண்னுமா நெறி நடக்கும்
வரியை தரவே வழி பிறக்கும்
கயவன் போல் நீ இருந்தால்
இயல்பு இதுவே நீ மொழிந்தால்
தினகூலி வயற்றில் நீ மிதிக்க
முயல்வோன் எல்லான் துரோகியாவான்
தேநீர் வீடுதிக்கும் உண்டு
தேய்யிலை தோட்டத்திற்க்கும் உண்டு
தினகூலி அவனுக்கும் உண்டு
தினசரி விருந்தூண்பவனுக்கும் உண்டு
வரிநெறி பழக்கம் வழிவழியே வந்திட
மக்கள் வாழ்வு நம்மை கானும்
நாடும் உடனே வளமை கானும்
வல்லரசு என்றே பெருமை கானும்