காளைகளை அடக்கும் காளையர்கள்

வாடி வாசல் ஓடிவாடா
காளைகளை அடக்கவாடா
அத்தை பொண்ணு உன்னைக் கண்டால்
வம்பு செய்து கட்டிக்கொள்வாள்
வீரனுக்குத்தானே அவள்
தன் முந்தானையை விரித்திடுவாள்
துணிந்து நீயும் எழுந்து வாடா
ஜல்லிக்கட்டு விளையாடத்தான்
இந்த ஆண்டும் தடை போட்டால்
தடைகளை மீற வேண்டாம்
வனவிலங்கு இருக்குமிடம்
வண்டலூர் zooவுக்குள்ளே
காளைகளை பூட்டிவைப்போம்
பீட்டா அப்ப என்ன செய்யும்?
புல்கட்டு வாங்கி வந்து
எத்தனை நாட்களுக்கு பாதுகாக்கும்?
பீட்டா அங்க வரலையென்றால்
சட்டத்தை நாமும் மீறுவோம் வாடா!

எழுதியவர் : கிச்சாபாரதி (26-Dec-16, 11:09 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 190

மேலே