பெண் சிசு கொலைமரண வாக்குமூலம்

அன்னை வயிற்றில் இருக்கின்றேன்
சிறிது நேரத்தில் கருப்பையை விட்டு இறப்பை தழுவ போகின்றேன்
ஆயிரம் ஆசைகள் பொத்தி பொத்தி வளர்த்தாள்
ஆயினும் நான் பெண்ணாய் போனதினால் இந்த பிள்ளையை பெற மாட்டாள்
வயதில் பெரியவர்களே!
தாய் வயிற்றில் இருக்கும் எனை
மரண சேற்றில் வீசலாமா
இறப்பை இன்னும் நெருங்காதவர்களே
பிறப்பை இன்னும் நெருங்காத எனக்கு
இறப்பை இனாம் தரலாமா
வருத்த படுகிறேன்
என் இறப்பை நினைத்து அல்ல என் அன்னையின் இயலாமையை நினைத்து.....
வருகிறேன் இல்லை இல்லை மரணிகின்றேன்

எழுதியவர் : பிருந்தா நித்யானந்த் (28-Dec-16, 3:26 pm)
பார்வை : 138

மேலே